இப்போ கொஞ்ச நாள் முன்னாடி தான் வெண்ணிற இரவுகள் படிச்சேன். இயற்கை படம் பாத்துட்டு book படிச்சா அந்த twist வரும் போது ஸ்வாரசியம் இல்லாம போயுடுமோனு பயந்துட்டே தான் படிச்சேன் twitter.com/VS_offll/status/1594632238670704640
முடிவு என்னனு ஏற்கனவே தெரிஞ்சதுனால நம்ம ஹீரோ உருகி உருகி காதலிக்கிற அப்போ எல்லாம் கஷ்டமாவே இருந்துது. இருண்டு போய் இருக்குற அவன் உலகம் கொஞ்சம் கொஞ்சமா வெளிச்சம் பாக்குற அப்போ எல்லாம் மறுபடியும் இருள போகுதேனு பாவமா இருந்தது.
ஆனா படிக்க படிக்க, அந்த கடைசி பக்கம் எப்போ வந்துதுனே தெரியல. எப்பவும் மனச பாதிக்கிற climax scene வந்தா, அந்த கோவத்த ஏதோ ஒரு character மேலயாது காட்டி நிம்மதி ஆய்டலாம். ஆனா வெண்ணிற இரவுகள்ல யார் மேலயும் கோபம் கொள்ள முடியாது.
எல்லாருமே நல்லவங்க. மூணு பேரோட ஆசையும் நேர்மையா இருக்கு. யாரும் யாரையும் வற்புறுத்தல. நியாயப்படி மூணு பேருக்குமே ஆசை பட்டது கெடச்சு இருக்கணும். ஆனா அப்படி நடக்காது என்பது தான் இயற்கையின் விதி. வெண்ணிற இரவுகள விட பொருத்தமான தலைப்பு இயற்கை தான் 🖤